/

வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி

கடலூர் மாவட்டம், திருமுட்டம் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளியில், காட்டுமன்னார்கோவில் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் ஆகியவை சார்பில், அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 3:20 am

தினமணி

கடலூர் மாவட்டம், திருமுட்டம் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளியில், காட்டுமன்னார்கோவில் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் ஆகியவை சார்பில், அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கண்காட்சியில் மொத்தம் 11 பள்ளிகள் பங்கேற்றன. வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரா.மனோகரன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலையில் கண்காட்சி நடைபெற்றது. ஆரோக்கிய நல்வாழ்வு வள மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தொடக்க, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகள் பங்கேற்றன.
 கண்காட்சியில் நெடுஞ்சேரி அரசுப் பள்ளியின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தி.புகழேந்தி, ஆசிரியர் பயிற்றுநர் சித்ரா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர்.
 தொடக்கப் பள்ளி பிரிவில் புதுக்குப்பம் ஆர்.சி. தொடக்கப் பள்ளி முதல் பரிசையும், திருமுட்டம் தொடக்கப் பள்ளி இரண்டாவது பரிசையும், மேல்புளியங்குடி தொடக்கப் பள்ளி மூன்றாவது பரிசையும் பெற்றது.
 உயர் தொடக்கப் பள்ளி பிரிவில் அம்புஜவல்லிப்பேட்டை நடுநிலைப் பள்ளி முதல் பரிசு மற்றும் இரண்டாவது பரிசையும், திருமுட்டம் த.வீ.செ. மேல்நிலைப் பள்ளி மூன்றாவது பரிசையும் பெற்றன. தலைமை ஆசிரியர்கள் சேட்டு, ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். த.குருராஜன் நன்றி கூறினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.