மாணவர்களுக்கு பாராட்டு
இந்திய அளவில், நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்பதற்கான பத்து நாள்கள் பயிற்சி - தேர்வு முகாம்


இந்திய அளவில், நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்பதற்கான பத்து நாள்கள் பயிற்சி - தேர்வு முகாம் தென் பிராந்திய அளவில் கேரளா மாநிலத்தின் கோட்டயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சபரிஸா கல்லூரியில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்தப் பயிற்சி முகாமில் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் எஸ்.ஏ.தனவிஜயன், மாணவி பி.விசித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, புதன்கிழமை துணைவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென் பிராந்திய அளவில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற இந்த மாணவர்களை துணைவேந்தர் செ.மணியன், பதிவாளர்.கே.ஆறுமுகம் ஆகியோர் பாராட்டினர்.
நிகழ்ச்சியில் கலைப் புல முதல்வர் இ.செல்வராஜன், வேளாண் புல முதல்வர் எம்.ரவிச்சந்திரன், நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செüந்தரபாண்டியன், திட்ட அலுவலர்கள் எஸ்.அய்யப்பராஜா, எம்.ராஜவேலு, என்.காயத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...