டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அனிதா தற்கொலை விவகாரம்: பல்கலை., கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 செப்டம்பர் 2017, 2:57 am

குடந்தை வய்.மு. கும்பலிங்கம்

மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்புக்கு தனக்கு இடம் கிடைக்காத நிலையில், அரியலூர் மாவட்ட மாணவி அனிதா வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர்
 நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், கடலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை காலையில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 பின்னர் கல்லூரி வாசலில் அமர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கோஷமிட்டனர்.
 சிதம்பரம்: மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்துத் துறை மாணவ, மாணவிகளும் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஊர்வலமாக வந்து பல்கலைக்கழக நுழைவுவாயில் முன் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
 இதையடுத்து, சிதம்பரம் ஏஎஸ்பி என்.எஸ்.நிஷா தலைமையில், காவல் ஆய்வாளர் கே.அம்பேத்கர் மற்றும் போலீஸார் அப்பகுதியில் குவிந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 இதையடுத்து, தாற்காலிகமாக தற்போது கலைந்து செல்வதாகவும், நாளை மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் மாணவர்கள் கூறிவிட்டு கலைந்து சென்றனர்.
 இதேபோல சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள், சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்புகளைப் புறக்கணித்து தங்களது கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 நெய்வேலி: நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் அகம் மாணவர்கள் மாற்றமைப்பினர் நெய்வேலிஆர்ச் கேட் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 தலைமை ஒருங்கிணைப்பாளர் அ.பூவராகவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீட், க்ளாட் போன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தினர். முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஆலன் ஆகாஷ், ரா.ஹரிஹரன், ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் எப்எப்சி இளைஞர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.