மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :6 செப்டம்பர் 2017, 2:54 am

குடந்தை வய்.மு. கும்பலிங்கம்

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் ஆசிரியர் தினம் கடலூர் வண்டிப்பாளையத்தில் கொண்டாடப்பட்டது. மன்றத் தலைவர் கடல்நாகராஜன் தலைமை வகித்தார். துர்கா பயிற்சி பள்ளி தாளாளர் செந்தில்முருகன் வரவேற்றார். நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமை ஆசிரியர் இஸ்ரúல், டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வ.உ.சிதம்பரனார் படத்துக்கு அரிமா சங்கத் தலைவர் கி.திருமலை மாலை அணிவித்தார்.
 அன்னை தெரசா படத்திற்கு எழுத்தாளர் தில்லையாடி ராஜா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய 5 ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் சங்கீதா நன்றி கூறினார்.
 விருத்தாசலம் ஜெயப்பிரியா சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் தலைமை வகித்தார்.
 மாணவர்கள் சொற்பொழிவு, நாடகங்கள் மூலமாக ஆசிரியர் தின விழா குறித்து விளக்கினர்.
 மேலும், ஆசிரியர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஈஸ்வரிமகேஷ், நிர்வாக அலுவலர் ஆர்.சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் ஜி.கே. மெட்ரிக் மற்றும் பப்ளிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
 கல்விக் குழுமத் தலைவர் குமாரராஜா தலைமை வகித்து ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிர்வாக இயக்குநர் அருண் முன்னிலை வகித்தார்.
 கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல்வர் பார்த்திபன் நன்றி கூறினார்.
 மந்தாரக்குப்பம்: நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கம் சார்பில், மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவுக்கு, சங்கத் தலைவர் ஆர்.அன்வர்தீன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவர் டி.ராஜமாரியப்பன் கலந்துகொண்டு பேசினார். பின்னர், அரசு பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சிக்கு பாடுபட்ட பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.ஏ.ஜேக்கப்புக்கு சிறந்த தலைமையாசிரியர் விருதை வழங்கி பாராட்டினார். உடற்கல்வி ஆசிரியர்கள் பி.சத்தியராஜ், கே.ராமச்சந்திரன் ஆகியோர் சிறந்த ஆசிரியராக கௌரவிக்கப்பட்டனர். ஓவிய ஆசிரியர் டி.தேவசெல்லப்பா நன்றி கூறினார்.
 பண்ருட்டி: பண்ருட்டி செயின்ட் பால் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தாளாளர் அ.கிருபாகரன் தலைமை வகித்தார். செயற்கைக்கோள் துணைகொண்டு அதிக நேரம் பயிற்றுவித்த ஆசிரியை ஏ.ரோசிட்டா ரெக்சலினை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் என்.வெங்கடாஜலபதி அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து கூறினார். காடாம்புலியூர் ராஜகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளர் ராஜகுருநாதன் தலைமை வகித்தார். முதல்வர் இ.பிரியா முன்னிலை வகித்தார். இயக்குநர் சிவபாலகி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
 காட்டுக்கூடலூர் கனி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளர் சஞ்சிவீராயர் தலைமை வகித்தார். தலைமையாசிரியை மீனா மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கி மாணவர்கள் ஆசி பெற்றனர். நெய்வேலி பயோனியர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.எம்.கார்த்திகேயன் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.