டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவிரி விவகாரத்தில் 3-ஆவது நாளாக சாலை மறியல்: 600 பேர் கைது 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கடலூர் மாவட்டத்தில் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

News image
Updated On :4 ஏப்ரல் 2018, 3:04 am

குடந்தை வய்.மு. கும்பலிங்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கடலூர் மாவட்டத்தில் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
 காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏப்.3-ஆம் தேதிய மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. மேலும், மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 அதன்படி, செவ்வாய்க்கிழமை கடலூரில் 3-ஆவது நாளாக திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு 75 பேர் கைதாகினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகரச் செயலர் ஆர்.அமர்நாத் தலைமையில் அண்ணா மேம்பாலத்தில் மறியலில் ஈடுபட்டு 70 பேர் கைதாகினர்.
 சிதம்பரம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, சிதம்பரத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 சிதம்பரம் நகர திமுக சார்பில், நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் தெற்கு ரத வீதியில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 140 பேரை நகர போலீஸார் கைது செய்தனர். இதேபோல சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜி.மாதவன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற அந்தக் கட்சியின் நகரச் செயலர் ராஜா, வாஞ்சிநாதன் உள்ளிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
 புவனகிரி: புவனகிரியில் நகர திமுக சார்பில் எம்எல்ஏ துரை.கி.சரவணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல, புவனகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாலக்கரை, காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
 பண்ருட்டி: இதேபோல, பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை மனித நேய ஜனநாயகக் கட்சியினர் திரண்டனர். அங்கிருந்து நகரச் செயலர் யாசீன் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. தலைமைக் கழகப் பேச்சாளர் மன்சூர் பாய், ஒன்றியச் செயலர் ரஹீம், நகரப் பொருளாளர் பீர்முகமது, ஒன்றியப் பொருளாளர் அஜ்மல், இளைஞரணிச் செயலர் அப்துல் சலீம் உள்ளிட்டோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டு ஊர்வலமாகச் சென்று, பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட 22 பேரை பண்ருட்டி போலீஸார் கைது செய்தனர்.
 மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் நான்கு முனைச் சந்திப்பில் மாவட்டச் செயலர் இப்ராஹீம் தலைமையில், நகரச் செயலர் ஷாஜகான் முன்னிலையில், மனித நேய ஜனநாயகக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 22 பேரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலர் தண்டபாணி தலைமையில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராஜீ, சிவகாமி, நகரச் செயலர்கள் குறிஞ்சிப்பாடி செல்வமணி, வடலூர் நமச்சிவாயம் உள்ளிட்டோர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து, இந்தியன் வங்கி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் குறிஞ்சிப்பாடி போலீஸார் கைது செய்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.