40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கடவுச் சீட்டு மையத்துக்கு பூட்டுப் போட்டு போராட்டம்

கடலூர் தபால் நிலையத்தில் செயல்படும் கடவுச் சீட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு, பூட்டுப் போட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 60 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:32 am IST

கடலூர் தபால் நிலையத்தில் செயல்படும் கடவுச் சீட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு, பூட்டுப் போட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 60 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும், மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அதற்கான காலக்கெடு நிறைவடைந்த பின்னரும், மீண்டும் கால அவகாசம் கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், புதன்கிழமை அந்தக் கட்சியின் மாநில நிர்வாகி தி.கண்ணன் தலைமையில், கட்சியினர் கடலூர் தலைமைத் தபால் நிலையத்தில் அமைந்துள்ள கடவுச் சீட்டு சேவை மையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டதுடன், அலுவலர்களை உள்ளே வைத்து வெளியே பூட்டுப் போட்டனர். இதனையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மாவட்டச் செயலர் த.ஆனந்த், நகரச் செயலர் கமலநாதன், இளைஞரணிச் செயலர் செந்தில், மாணவரணி அருள்பாபு, சிறுபான்மையினர் பிரிவு ஷாருகான், நிர்வாகிகள் சிலம்பு, தண்டபாணி, சதீஷ், ராஜேஷ் உள்ளிட்ட 60 பேரை கைது செய்தனர். 
பின்னர், பூட்டைத் திறந்து அலுவலர்களை மீட்டனர். 
இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை: இதேபோல, திட்டக்குடியில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை வெலிங்டன் நீர்த்தேக்கப் பாசன குறு- சிறு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் தயா.பேரின்பன் தலைமையில் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல, எம்.சேகர் தலைமையில் செயல்பட்டு வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலூர் எஸ்.என்.சாவடியில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் ஜி.மணிவண்ணன் உள்பட 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.