சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கார் மோதியதில் கல்லூரி மாணவிகள் 2 பேர் காயம்

பண்ருட்டி அருகே கார் மோதியதில் கல்லூரி மாணவிகள் இருவர் காயமடைந்தனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:36 am IST

பண்ருட்டி அருகே கார் மோதியதில் கல்லூரி மாணவிகள் இருவர் காயமடைந்தனர்.
விருத்தாசலம் வட்டம், திருவம்பர், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் இந்துமதி. பண்ருட்டி வட்டம், நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் மகள் பிரியதர்ஷினி. இவர்கள் இருவரும், பண்ருட்டியில் உள்ளே அரசுப் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை இருவரும் பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்குச் செல்ல சாலையைக் கடந்தபோது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். 
அவர்கள் இருவரையும் மீட்டு, புதுச்சேரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.