கூட்டுறவுச் சங்கத் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்தக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அங்குசெட்டிப்பாளையம் கூட்டுறவுச் சங்கம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்வுக்கான 2-ஆம் கட்ட வேட்புமனு தாக்கல் அண்மையில் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட 50 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் மனுக்களைத் தவிர, ஏனையோர்களின் மனுக்களை நிராகரித்துவிட்டனராம். இதனைக் கண்டித்தும், ஜனநாயக முறைப்படி மீண்டும் தேர்தலை நடத்தக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.சுரேந்தர் தலைமையில், ஒன்றியச் செயலர் தேவராசு, பண்ருட்டி நகரச் செயலர்கள் மணி (மேற்கு), செந்தில் (கிழக்கு), ஒன்றியப் பொருளாளர் அப்பர், துணைச் செயலர் ராகவன், பலராமன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அங்குசெட்டிப்பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தை முற்றைகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, அவர்கள் மீண்டும் ஜனநாயக முறைப்படி கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும்.
இல்லையெனில், கூட்டுறவுச் சங்கத்துக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







