என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2-ஆம் நாளாக விசிக போராட்டம்

சிதம்பரம் அருகே தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை 2-ஆம் நாளாக

Updated On :5 ஏப்ரல் 2018, 8:33 am IST

சிதம்பரம் அருகே தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை 2-ஆம் நாளாக சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தலித் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலர் பால.அறவாழி, கடலூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் தாமரைச்செல்வன், சிதம்பரம் தொகுதிச் செயலர் வ.க.செல்லப்பன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பெரு.திருவரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீரப்பாலையம் ஓன்றியச் செயலர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தை முன்னிட்டு, சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே கடலூர் டி.எஸ்.பி. லாமேக் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், அலுவலகத்தில் கோட்டாட்சியர் இல்லாததால் அவரது நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். 
தொடர்ந்து, கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.