
கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, அவரது உடலை சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்று புதன்கிழமை காலை வரை விசாரணை நடைபெற்றது.
இந்தத் தகவலறிந்த கடலூர் நகர திமுகவினர் கட்சி அலுவலகத்தில் திரண்டு, அங்கிருந்து ஊர்வலமாகச் சென்றனர். தொடர்ந்து அவர்கள் நகர திமுக செயலர் கே.எஸ்.ராஜா தலைமையில் பாரதிசாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியலை கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





