காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

கொள்ளிடத்தில் கதவணை கட்டக் கோரி ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கொள்ளிடக் கரையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கொள்ளிடக் கரையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
காட்டுமன்னார்கோவில் அருகே எய்யலூர் கொள்ளிடக் கரையோரத்தில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜி.மாதவன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் எம்.ஜாகீர்உசேன், செயலர் ஜி.விஜயகுமார், பி.பாலமுருகன், டி.முனுசாமி, எஸ்.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், துணைத் தலைவர் ஆர்.ராமச்சந்திரன், எஸ்.பிரகாஷ், பி.கற்பனைச்செல்வம், என்.இளங்கோவன், யு.மூர்த்தி, கே.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேசினர். 
ஆர்ப்பாட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் கொள்ளிடம் ஆற்றில்  நாகை மாவட்டம், குமாரமங்கலம், கடலூர் மாவட்டம், ஆதனூர் இடையே கதவணை கட்டப்படும் என அறிவித்தும் இதுவரை கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை.  
கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிக்க அரசு உடனடியாக கதவணை கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.