கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கொள்ளிடக் கரையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே எய்யலூர் கொள்ளிடக் கரையோரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜி.மாதவன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் எம்.ஜாகீர்உசேன், செயலர் ஜி.விஜயகுமார், பி.பாலமுருகன், டி.முனுசாமி, எஸ்.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், துணைத் தலைவர் ஆர்.ராமச்சந்திரன், எஸ்.பிரகாஷ், பி.கற்பனைச்செல்வம், என்.இளங்கோவன், யு.மூர்த்தி, கே.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் கொள்ளிடம் ஆற்றில் நாகை மாவட்டம், குமாரமங்கலம், கடலூர் மாவட்டம், ஆதனூர் இடையே கதவணை கட்டப்படும் என அறிவித்தும் இதுவரை கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை.
கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிக்க அரசு உடனடியாக கதவணை கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி இளநிலை எழுத்தா் பணிக்கான தட்டச்சு தோ்வில் 17 போ் மட்டுமே தோ்ச்சி

தில்லியில் பல இடங்களில் மழை: மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு

மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க கோரிக்கை
குப்பை மேலாண்மை சிக்கல்: இந்தூா் மாடல் நடைமுறைப்படுத்த துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


