டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

கடலூர் அரசுக் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையமாகச் செயல்பட உள்ள கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

வாக்கு எண்ணிக்கை மையமாகச் செயல்பட உள்ள கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
மக்களவை பொதுத் தேர்தல் வருகிற 2019-ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தலில், பல்வேறு பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் கொண்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நாளின் போது திறக்கப்படுவது வழக்கம். 
மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான அரசுக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகளை கடலூர் அரசு கலைக் கல்லூரியில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்
டுள்ளது. 
எனவே, வாக்கு எண்ணும் அறைகள், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகள், அதன் பாதுகாப்பு தன்மை, பாதுகாப்பு அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிடுவது, மின் வசதி, கழிப்பறை வசதி, தொலைதொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் வகையில் தொலைதொடர்பு வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், கடலூர் சார்- ஆட்சியர் கே.எம்.சரயூ, விருத்தாசலம் சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், தேர்தல் வட்டாட்சியர் ப.பாலமுருகன், வட்டாட்சியர்கள் பா.சத்தியன் (கடலூர்), விஜயா (குறிஞ்சிப்பாடி), ஆறுமுகம் (பண்ருட்டி), கவியரசு (விருத்தாசலம்), கண்ணன் (திட்டக்குடி), விருத்தாசலம் நகராட்சி ஆணையர் பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.