பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

எம்ஜிஆர் நினைவு தினம்: அதிமுகவினர் மரியாதை

கடலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினம் அதிமுகவினரால் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 

Updated On :25 டிசம்பர் 2018, 8:54 am IST

கடலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினம் அதிமுகவினரால் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
 இதையொட்டி, கடலூர்  மஞ்சக்குப்பத்திலுள்ள அவரது சிலைக்கு நகரச் செயலர் ஆர்.குமரன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், விவசாயப் பிரிவு செயலர் கே.காசிநாதன், தொழிற்சங்க செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், ஒன்றியச் செயலர் ராம.பழனிச்சாமி, ஜெயலலிதா பேரவை நகரச் செயலர் வ.கந்தன், நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வம், மணி, அன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிதம்பரம்: இதேபோல, சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், கொள்கை பரப்பு துணைச் செயலர் பு.தா.இளங்கோவன், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், நகரச் செயலர் ஆர்.செந்தில்குமார், ஒன்றியச் செயலர் அசோகன், மாரிமுத்து, மாவட்ட துணைச் செயலர் தேன்மொழி காத்தவராயசாமி, சுந்தரமூர்த்தி, ராசாங்கம், தலைமைக் கழகப் பேச்சாளர் தில்லை கோபி, வீரமணி, திருமாறன், பன்னீர்செல்வம், வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன், சிங்காரவேல், முருகன் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, மேலவீதியில் உள்ள அவரது சிலைக்கும் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பண்ருட்டி: பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்துக்கு, நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், அவைத் தலைவர் ராஜதுரை உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெய்வேலி: நெய்வேலி, வட்டம் 17-இல் உள்ள அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க வளாகத்தில் எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாவட்ட வழக்குரைஞர் பிரிவு துணைத் தலைவர் ரா.ராஜசேகர், வட்டம் 9-இல் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சொரத்தூர் ரா.ராஜேந்திரன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
நிகழ்ச்சியில் அண்ணா தொழிலாளர் ஊழியர் தொழிற்சங்க செயலர் ராம.உதயகுமார், தலைவர் அபு, பொருளாளர் தேவானந்தன், அலுவலகச் செயலர் அல்போன்ஸ், நகர துணைச் செயலர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர்கள் பன்னீர்செல்வம், ஜோசப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, ஒன்றியச் செயலர் கோவிந்தராஜ் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ரா.ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத் தலைவர் கண்ணப்பன், பொருளாளர் முருகையன், துணைச் செயலர் சிவராமலிங்கம், பேரூர் செயலர் ஆனந்தபாஸ்கர்,  முன்னாள் நகரச் செயலர் ராமலிங்கம், முன்னாள் பேரூர் தலைவர் முத்துலிங்கம், நிர்வாகி ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.