பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தனிநபர் பிரச்னைகள், பொதுப் பிரச்னைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 321 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மேலும், மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்துக்கு ஆட்சியர் நேரடியாகச் சென்று அவர்களிடம் மனுக்களைப் பெற்றார். பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குள்பட்டும் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித் துணை ஆட்சியர்கள் கூஷ்ணாதேவி, சேதுராமன், துணை ஆட்சியர் (பயிற்சி) எஸ்.கணேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இராமு, தாட்கோ மேலாளர் ராஜலட்சுமி உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com