திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட தீர்த்தனகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ரெங்கநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழக முதல்வரின் விரிவான 

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:25 am

தினமணி

குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட தீர்த்தனகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ரெங்கநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
 தீர்த்தனகிரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்அன்புசெல்வி தலைமை வகித்து, முகாமைத் தொடக்கிவைத்தார். முகாமில் ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், கர்ப்பப்பை, புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மற்றும் ஏ.ஜி. பத்மாவதி மருத்துவமனைகளின் சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர். முகாமில், 1,061 பேர் கலந்து கொண்டனர். இதில் 23 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.
 ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து அலுவலர் சாய்ராபானு மேற்பார்வையில் பொதுமக்கள், கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் ஊட்டச் சத்து கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. முகாம் ஏற்பாடுகளை வடலூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.சர்க்கரை, சமுதாய நல செவிலி ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள் வே.பாண்டியராஜன், மாரிமுத்து, மேற்பார்வையாளர் பழனிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
 தீர்த்தனகிரி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பி.பிரிமளன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.