சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் நினைவு தினம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கடலூர் சிஐடியு அலுவலக வளாகத்தில் உள்ள சிங்கார வேலரின் உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாவட்ட சிஐடியு செயலர் பி.கருப்பையன், மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன், மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜி.வைத்தியலிங்கம், செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், சிஐடியு நிர்வாகிகள் ஆர்.ஆளவந்தார், வி.கிருஷ்ணமூர்த்தி, எ.பாபு, கவிஞர் பால்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டம் சார்பில், ம.சிங்காரவேலரின் உருவச் சிலைக்கு அதன் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமையில், மாநிலச் செயலர் எஸ்.கெஜேந்திரன், மாவட்டச் செயலர் வி.சிவக்குமார், இளைஞர் பேரவைத் தலைவர் பி.கோகிலன், துணைத் தலைவர் வீரமுத்து, மாவட்ட இணைச் செயலர் மாலைமணி, சி.பழனிவேல், கடலூர் நகரத் தலைவர் பி.ஜனார்த்தனன், கடலூர் ஒன்றியச் செயலர் காரை டிசெல்வம், ஒன்றியத் துணைத் தலைவர் ஏ.குமரன், மாவட்ட இணைச் செயலர் எம்.சக்திவேல் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.