பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிவசுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேகம் 

பண்ருட்டி அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி - தேவசேனா உடனாகிய சிவசுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:24 am

தினமணி

பண்ருட்டி அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி - தேவசேனா உடனாகிய சிவசுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலை விநாயகர் வழிபாடு, மஹா கணபதி ஹோமம், பூர்வாங்க பூஜை மற்றும் புதிய சிலைகள் கரிகோலம் ஆகியவை நடைபெற்றன.
 தொடர்ந்து, மாலை 6 மணி அளவில் வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள், ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
 இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகளுடன் ஹோமங்கள், தத்துவார்ச்சனை மற்றும் கலசம் கோயிலை வலம் வருதல் ஆகியவை நடைபெற்று, சுமார் 8.30 மணி அளவில் சிவாச்சாரியார் தி.சுப்ரமணிசிவம் கோபுர கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுமார் 7 மணி அளவில் சர்வ அலங்காரத்தில் சிவசுப்ரமணி சுவாமி வீதியுலா நடைபெற்றது.
 விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சி.கலைமணி மற்றும் அம்பேத்கர் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.