சிதம்பரம் கோயிலில் தீயணைப்புக் கருவி பொருத்தம்
சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயிலில் பாதுகாப்பு கருதி சனிக்கிழமை தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.


சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயிலில் பாதுகாப்பு கருதி சனிக்கிழமை தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் அனைத்துக் கோயில்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கும் விதத்தில் தீயணைப்புக் கருவிகளை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சிதம்பரம் தில்லையம்மன் கோயிலில் செயல் அலுவலர் முருகன் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர் வாசு உள்ளிட்டோர் கோயிலின் நான்கு இடங்களில் தீயணைப்புக் கருவிகளை பொருத்த முடிவு செய்தனர்.
முதல் கட்டமாக, கருவறைக்கு அருகிலும், கோயிலின் அர்த்த மண்டபம் பகுதியிலும் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...