காட்டுமன்னார்கோவில் அருகே தனியார் பேருந்து மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கந்தகுமாரன் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது ஒன்றரை வயது மகள் தங்கமீனா. குழந்தை தங்கமீனாவும், அவரது தாயும் செவ்வாய்க்கிழமை இரவு அந்தப் பகுதி ஏரிக் கரையில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பியுள்ளனர். அப்போது, சிதம்பரத்தில் இருந்து நெடுஞ்சேரி புத்தூர் வழியாக வீராணம் ஏரிக் கரை சாலையில் காட்டுமன்னார்கோவில் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிர்பாரத விதமாக சாலையில் தாயுடன் நடந்து சென்ற குழந்தை தங்கமீனா மீது மோதியது. இந்த விபத்தில் குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து புத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.