எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விபத்தில்லாமல் வாகனம் ஓட்டியவருக்கு தங்கப் பதக்கம்

கடலூரில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டியதற்காக தமிழக அரசின் தங்கப் பதக்கம் பெற்றார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 3:53 am

DIN

கடலூரில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டியதற்காக தமிழக அரசின் தங்கப் பதக்கம் பெற்றார்.
கடலூர் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் திரைப்படக் கருவி இயக்குபவராகப் பணிபுரிபவர் ந.முருகன். இவர் ஊர்தி ஓட்டுநர் பணியில் 1987-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை பணியாற்றிய காலத்தில், எந்தவித விபத்தின்றி வாகனத்தை ஓட்டியதற்காக தமிழக அரசால் வழங்கப்படும் தங்கப் பதக்கத்தைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக 4 கிராம் கொண்ட தங்கப் பதக்கமும் மேலும், 25 ஆண்டுகாலம் அப்பழுக்கற்ற முறையில் பணியை நிறைவு செய்தமைக்கு ஊக்கத் தொகையாக ரூ.2 ஆயிரமும் அரசால் வழங்கப்பட்டது. இந்த வெகுமதிகளை கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் திங்கள்கிழமை வழங்கினார் (படம்).
நிகழ்ச்சியில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலக கணக்கர் ல.ஆனந்தகிருஷ்ணன், தட்டச்சர் சே.சிவகுரு, தொழில்நுட்ப உதவியாளர் து.பாலாஜி, மின் உதவியாளர் ந.ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.