

கொலை வழக்கில் தந்தை, மகன் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
பெண்ணாடம் அருகே உள்ள துறையூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (46). இவரது மகள் கிருஷ்ணவேணிக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜின் மருமகள் கோகிலாவுக்கும் கடந்த 30-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. அதனை கிருஷ்ணமூர்த்தி தட்டிக்கேட்டார். அதில், ஆத்திரமடைந்த கோகிலா, கோவிந்தராஜ், மாமியார் ஜானகி, கொழுந்தனார் ராஜா ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணாடம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கோவிந்தராஜ் (55), ராஜா (35) ஆகிய இருவரும் திங்கள்கிழமை பெண்ணாடம் கிராம நிர்வாக அலுவலர் பிணுகுட்டன் முன்னிலையில் சரணடைந்தனர். இதையடுத்து இருவரும் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். வழக்கு தொடர்பாக கோகிலா, ஜானகி இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

இபிஎஸ் இன்று தில்லி பயணம்! பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையா?

திரிணமூல் காங்கிரஸில் நீக்கப்பட்ட எம்எல்ஏ புதிய கட்சி தொடங்கினாா் - 182 தொகுதிகளில் போட்டி
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

