ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாநில திறன் மேம்பாட்டு மாநாடு: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

மாநில திறன் மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்குமாறு இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி அழைப்பு விடுத்தார். 

News image
Updated On :5 ஜூன் 2018, 2:48 am

DIN

மாநில திறன் மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்குமாறு இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி அழைப்பு விடுத்தார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக மாநில திறன் மேம்பாட்டு மாநாடு சென்னை கிண்டியில் வருகிற 9,10-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களின் திறன் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்படும். தெரிவு செய்யப்படும் படைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ.ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். 
இந்த மாநாட்டில், தமிழ்நாட்டின் திறன் சூழல் - திறன் முனைப்புகள் மற்றும் வாய்ப்புகள், உலக அளவிலான திறன் பயிற்சி குறித்த சிறந்த நடைமுறைகள் ஆகிய தலைப்புகளில் துறை வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்குகளும் நடத்தப்படும். 
மாநாட்டைத் தொடர்ந்து 11, 12 ஆகிய தேதிகளில் தனித்திறன் தேடும் நிகழ்வு நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தகுதியானவர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ந்ண்ப்ப்ள்ட்ன்ய்ற்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கெனவே மாவட்ட அளவில் நடைபெற்ற திறன் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தகுதியானவர்கள் தனித் திறன் தேடலில் நேரடியாகப் பங்கேற்கலாம். மாநில அளவில் நடத்தப்படும் இந்தத் தனித்திறன் தேடலில் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஜூன் 21 முதல் 23-ஆம் தேதி வரை பெங்களூரில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டியிலும், ஜூலை மாதம் புதுதில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்என ஆட்சியர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.