காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

காவல் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட முயற்சி

கோரிக்கையை வலியுறுத்தி, திட்டக்குடி காவல் நிலையத்தை பா.ம.க.வினர் திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனர்.

Updated On :26 ஜூன் 2018, 8:51 am IST

கோரிக்கையை வலியுறுத்தி, திட்டக்குடி காவல் நிலையத்தை பா.ம.க.வினர் திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனர்.
 திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண், திட்டக்குடியில் தனியார் தையல் பயிற்சிப் பள்ளியில் பயின்று வருகிறார். கடந்த 16-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற அந்த பெண் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து திட்டக்குடி காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணின் தந்தை அளித்த புகாரில், தி.இளமங்களத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தாராம். எனினும், புகாரின் மீது திங்கள்கிழமை வரை காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
 இந்த நிலையில், திட்டக்குடியில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், அந்தப் பெண்ணின் தந்தை முறையிட்டாராம். இதனையடுத்து கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் அசோக்குமார், மாவட்டச் செயலர் சுரேஷ், வன்னியர் சங்கச் செயலர் மோகன், திட்டக்குடி தொகுதி அமைப்பாளர் தனபால் ஆகியோர் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரின் நிலை குறித்து கேட்டனராம். ஆனால், போலீஸார் அளித்த பதிலில் திருப்தியடையாத கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் சூரக்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, செவ்வாய்க்கிழமைக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.