பண்ருட்டியில் தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையோரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பண்ருட்டி காமராஜ் நகரைச் சேர்ந்த சீனிவாசன் செட்டியார் மகன் எஸ்.விஜயரங்கன் (47). கட்டுமானப் பொருள்கள், பெயின்ட் விற்கும் கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த சனிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு பைக்கில் வீடுக்குப் புறப்பட்டபோது, அவரை மர்ம நபர்கள் வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கினராம். பின்பு, அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் குள்ளஞ்சாவடி அருகே விஜயரங்கனை கடத்தல் கும்பல் விடுவித்துச் சென்றது. தலையில் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து 8 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் கூறியதாவது:
விஜயரங்கன் தன்னை மர்ம நபர்கள் கடத்திச் சென்று, பின்னர் விடுவித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
சரியான தகவல் அளிக்கவில்லை. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். சிகிச்சை முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








