முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

சிதம்பரம் அருகே புவனகிரியில் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்த இடத்தில் அமைந்துள்ள, ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் அவதாரஸ்தல் மிருத்திகா பிருந்தாவனத்தில்,

Updated On :26 ஜூன் 2018, 9:18 am IST

சிதம்பரம் அருகே புவனகிரியில் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்த இடத்தில் அமைந்துள்ள, ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் அவதாரஸ்தல் மிருத்திகா பிருந்தாவனத்தில், கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
 முன்னதாக, காலை 5 மணிக்கு சுப்ரபாதம் மற்றும் நிர்மாலய அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கலஸ்தாபனம், ஹோமங்கள் நடைபெற்றன. காலை 11 மணிக்கு ஸ்ரீ ராகவேந்திரருக்கு மகாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
 விழாவில் பிருந்தாவனம் அறக்கட்டளை தலைவர் ஆர்.ராமநாதன், செயலர் ஜி.உதயசூரியன், பொருளாளர் கே.கதிர்வேலு, சி.டி.அப்பாவு, உபயதாரர்கள் ஆர்.வி.ஆறுமுகம், ஆர்.வி.செந்தில், எஸ்.சூர்யா, அர்ச்சகர்கள் ஆர்.நரசிம்மாச்சாரியார், என்.ரகு ஆச்சாரியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ ராகவேந்திரரை தரிசித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.