மணிலா விலை கடும் சரிவு: விவசாயிகள் கவலை
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மணிலா பயறின் கொள்முதல் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மணிலா பயறின் கொள்முதல் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி, அயன் குறிஞ்சிப்பாடி, ரெட்டிக்குப்பம், கண்ணாடி, கீழூர், வெங்கடாம்பேட்டை, ஆடூர் அகரம், ராசாகுப்பம், பூதம்பாடி, கல்குணம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் கார்த்திகை பட்டத்தில் சுமார் 7,500 ஏக்கர் பரப்பளவில் மணிலா சாகுபடி செய்துள்ளனர். தற்போது, மணிலா அறுவடை தீவிரம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக, குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மணிலா பயறு மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த மணிலா பயறு விலை, தற்போது கடும் வீழ்ச்சியடைந்து 80 கிலோ மூட்டை ஒன்றுக்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூட்டத்தில் ரூ. 4,600-க்கு விலை போகிறது. இதனால், மணிலா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 2015-இல் 80 கிலோ பயறு ரூ. 7,800-க்கும், 2016-இல் ரூ. 7 ஆயிரத்துக்கும், 2017-இல் ரூ. 6,800-க்கும் விலை போனது. நிகழாண்டு ரூ. 4,600-ஆக குறைந்து கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு ஏக்கர் மணிலா விதைப்புக்கு ரூ. 35 ஆயிரம் செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு சராசரியாக 12 முதல் 16 மூட்டை வரையில் மணிலா பயறு கிடைக்கும். வரவு - செலவைக் கணக்கிட்டால் மணிலா விவசாயிகளுக்கு மிஞ்சுவது ஒன்றுமில்லை.
குறிஞ்சிப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், கண்காணிப்பாளரின் ஆதரவுடன் உள்ளூர் வியாபாரிகளே விலையை நிர்ணயம் செய்கின்றனர்.
மேலும், வெளி மாநில வியாபாரிகளை பயிறு வாங்க விடுவதில்லை. உள்ளூர் வியாபாரிகள் சிலர் குறைந்த விலையில் மணிலா பயறை வாங்கி வெளி மாநில வியாபாரிகளிடம் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வேளாண் விற்பனை பிரிவுத் துறை மாவட்டச் செயலர் ஆகியோருக்கு பலமுறை மனு அனுப்பியும், நேரில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கையும் இல்லை.
கடந்த ஆண்டை காட்டிலும் நிகழாண்டு 80 கிலோ மூட்டை ஒன்றுக்கு சுமார் ரூ. 1,500 வரையில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, மணிலாவுக்கு விலையை நிர்ணயம் செய்வதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பிரசனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...