கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வினை 3,831 பேர் எழுதினர்.
பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களது ஆராய்ச்சி மேற்படிப்பு வரை உதவித் தொகை வழங்கிட மத்திய அரசால் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு கடலூர் மாவட்டத்திலிருந்து 4,178 பேர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், இந்தத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் 14 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்வை 3,831 பேர் எழுதினர். அறிவுத்திறன், கல்வித்திறன் அடிப்படையில் 2 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதில் தேர்ச்சி பெறுவோருக்கு அவர்களது பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் ஆண்டுக்கு ரூ.1,250 வீதம் உதவித் தொகையாக வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து கல்லூரி உள்ளிட்ட மேல்படிப்புகளுக்கும், ஆராய்சி மேற்படிப்பு வரையிலும் இந்த உதவித்தொகை வழங்கப்படுமென கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடலூரில் நடைபெற்ற தேர்வை முதன்மைக் கல்வி அலுவலர் க.பழனிச்சாமி ஆய்வு செய்தார்.
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வில் 18 பள்ளிகளைச் சேர்ந்த 391 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
சிதம்பரம் கல்வி மாவட்ட கல்வி அதிகாரி சுவாமி முத்தழகன் தேர்வை மேற்பார்வையிட்டார். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஏ.ரூபியாள்ராணி செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









