தீபாவளி சீர்வரிசை பிரச்னையால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
விருத்தாசலம் அருகே உள்ள நெய்வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (28). இவருக்கும், கோ.பவழக்குடி காலனியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராதாகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பியதோடு, இங்கு ஓட்டுநர் வேலைபார்த்து வருகிறார்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுமணத் தம்பதியினருக்கு பரமேஸ்வரி வீட்டிலிருந்து சீர்வரிசை செய்துள்ளனர். அதில், குறைவான பொருள்களே வழங்கியதாக ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் தெரிவித்தனராம்.
இதனால், பரமேஸ்வரி மனவேதனையில் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உடலில் தீக் காயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சம்பவம் குறித்து விருத்தாசலம் சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








