ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கடலூர் பேருந்து நிலையத்தில் பொருள்கள் விற்பனையில் விதிமீறல்: ஆட்சியர் ஆய்வுக்குப் பிறகும் அதே நிலை

கடலூர் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சுகாதாரமற்ற பொருள்கள் விற்பனையை சுட்டிக்காட்டிய பிறகும், ஞாயிற்றுக்கிழமையும் அதே நிலை தொடர்ந்தது

Updated On :8 அக்டோபர் 2018, 8:52 am IST

கடலூர் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சுகாதாரமற்ற பொருள்கள் விற்பனையை சுட்டிக்காட்டிய பிறகும், ஞாயிற்றுக்கிழமையும் அதே நிலை தொடர்ந்தது சார்-ஆட்சியரின் ஆய்வில் தெரியவந்தது.
 கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் சனிக்கிழமை கடலூர் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பல்வேறு கடைகளில் உணவுப் பண்டங்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டதும், தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாமல் விற்பனை செய்வதையும் கண்டுபிடித்தார். இதையடுத்து, கடை உரிமையாளர்களுக்கு உரிய அறிவுரை கூறியதோடு, உணவு பாதுகாப்புத் துறை மூலமாக 15 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்ய வைத்திருந்த தின்பண்டங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 இந்த நிலையில், கடலூர் பேருந்து நிலையத்தில் சார்-ஆட்சியர் கே.எம்.சரயு ஞாயிற்றுக்கிழமை காலை தூய்மைப் பணி மேற்கொண்டார். ஆட்சியர், சனிக்கிழமை ஆய்வு செய்தபோது இவரும் உடனிருந்ததால் கடைகளுக்குச் சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது, சனிக்கிழமை என்ன நிலையில் கடைகளில் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதோ, அதே நிலைதான் ஞாயிற்றுக்கிழமையும் இருந்தது தெரியவந்தது. ஈக்கள் மொய்த்தபடி இருந்த கேக், உற்பத்தி, காலாவதி தேதியில்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த பொருள்களை பறிமுதல் செய்தார்.
 தொடர்ந்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலரை தொடர்புகொண்டு, கடலூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரமான முறையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.