வடலூர் சுத்த சன்மார்க்க நிலையம் சார்பில் ஓமந்தூரார் 48-ஆம் ஆண்டு நினைவு நாள், சிறப்பு நூல் வெளியீடு, நினைவுப் பரிசுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சுத்த சன்மார்க்க நிலையத்தின் துணைத் தலைவர் ஊரன் அடிகளார் தலைமை வகித்துப் பேசினார். செயலர் ஆர்.செல்வராஜ் வரவேற்றார்.
முன்னதாக அவர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஓபிஆர் புகழஞ்சலி ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம், பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பின்னர், பள்ளி வளாகத்தில் இருந்த ஓபிஆர் உருவச் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சார்-ஆட்சியர் சரயு, வேளாண் முதலமைச்சர் ஓமந்தூரார் என்ற நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நூலின் முதல் பிரதியை என்எல்சி இந்தியா நிறுவன
முதன்மைப் பொது மேலாளர் ஆர்.மோகன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
சுத்த சன்மார்க நிலைய பொருளாளர் பூ.ஆசைதம்பி, இளங்குமரன், செயற்குழு உறுப்பினர்கள் ஓ.வி.வெங்கடாசலபதி, சி.ரவிச்சந்திரன், கி.இளங்கோவன், வள்ளலார் குருகுலம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெ.ராமானுஜம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிகளை ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதாராஜா வெங்கடேசன் தொகுத்து வழங்கினார்.
பிற்பகலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வடலூர் சுத்த சன்மார்க நிலை துணைத் தலைவர் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் தலைமை வகித்தார். ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் மாணவிகள் கலை நிகழ்ச்சி நடத்தினர்.
விழாவில் மாவட்ட , மாநில, பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை ஊக்குவித்து ஆசிரியர்களுக்கும் சார்-ஆட்சியர் சரயு, என்எல்சி நிறுவன முதன்மை பொது மேலாளர் ஆர்.மோகன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

