கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

சக்தி விநாயகர் கோயில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம்

பண்ருட்டி, காமராஜ் நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, 6-ஆம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா கோடியேற்றம் ஆகியவை கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பண்ருட்டி, காமராஜ் நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, 6-ஆம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா கோடியேற்றம் ஆகியவை கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
 இதையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 4.30 மணி அளவில் சிறப்பு அபிஷேகம், அங்குரார்பணத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் ம.ப.பன்னீர்செல்வம், பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம், விழாக் குழுவினர், காமராஜ் நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாலை 4 மணி அளவில் கற்பக விருட்ச வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார். பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, தினமும் காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மாலையில் தோகை மயில், பூத, சிங்க, யானை, ரிஷப, அன்ன, குதிரை வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். செப். 13-ஆம் தேதி (விநாயகர் சதுர்த்தி) மாலை 4 மணி அளவில் மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான் காட்சியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறும்.
 விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் காமராஜ் நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.