தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

சாராய வியாபாரி தடுப்புக் காவலில்  கைது

சாராய வியாபாரி தடுப்புக் காவலில்  கைது செய்யப்பட்டார்.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

சாராய வியாபாரி தடுப்புக் காவலில்  கைது செய்யப்பட்டார்.
 காடாம்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் குமரய்யா மற்றும் போலீஸார் கடந்த மாதம் 14-ஆம் தேதி நடுபிள்ளையார்குப்பம்  பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுத் தெருவைச் சேர்ந்த வே.நாமதேவன் (எ) உருண்டையன் (61) என்பவர், தனது வீட்டின் பின்புறத்தில் 1,350 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டறிந்து, அவரை கைது செய்தனர். தற்போது நாமதேவன் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.
 இவர் மீது ஏற்கெனவே  காடாம்புலியூர் மற்றும் பண்ருட்டி மது விலக்கு அமல்பிரிவில்  மொத்தம் 8 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இவரது தொடர் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு  கடலூர் மாவட்ட எஸ்பி (பொ) ஜெயகுமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர்  வெ.அன்புசெல்வன் தடுப்பு காவலில் கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து ஓராண்டுக்கு சிறையில் அடைக்கும் வகையில் நாமதேவன் குண்டர் தடுப்பு காவலில் கைதுசெய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.