விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

228 ஜோடிகளுக்கு திருமணம்: திருவந்திபுரத்தில் வாகன நெரிசல்

கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை 228 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை 228 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணம் கைகூடாதவர்கள் இந்தக் கோயிலில் வேண்டிக்கொண்டு, திருமணம் நிச்சயமானதும் இங்கு மணம் செய்துகொள்வது வழக்கம். அதன்படி, புதன்கிழமை முகூர்த்த தினம் என்பதால், இந்தக் கோயிலில்  ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. 
கோயிலில் முறைப்படி பதிவு செய்துகொண்ட 228 ஜோடிகளுக்கு காலை 6 மணி முதல் 11.30 மணி வரை திருமணம் நடைபெற்றதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. அதே நேரத்தில் கோயிலைச் சுற்றியுள்ள மண்டபம், சத்திரம், திருமண மண்டபங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றில் சுமார் 50 திருமணங்கள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
278 திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றதால், திருவந்திபுரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பண்ருட்டி - கடலூர் சாலையில் கோயில் அமைந்துள்ள திருவந்திபுரத்துக்கு சுமார் 3.5 கிமீ தொலைவுக்கு முன்னமே வாகனங்கள் நிறுத்தப்பட்டு மணமக்கள், அவர்களது உறவினர்கள் நடந்தே கோயிலுக்கு வந்தடைந்தனர். 
இதனால் அந்தப் பகுதியில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.