தேசிய அறிவியல் தினத்தையொட்டி, நெய்வேலி வட்டம் 9-இல் உள்ள கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட கெளரவத் தலைவரும், என்எல்சி நிறுவன முதன்மைப் பொது மேலாளருமான மதிவாணன் ஓவியப் போட்டியை தொடக்கி வைத்தார். கல்வித் துறை செயலர் எஸ்.விநாயகமூர்த்தி கட்டுரைப் போட்டியை தொடக்கி வைத்தார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் ஆர்.தாமோதரன் விநாடி-வினா போட்டியை தொடக்கி வைத்தார்.
போட்டிகளில் நெய்வேலி பகுதியில் உள்ள 18 பள்ளிகளிலிருந்து 1,225 மாணவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக சேக்ரட் ஹார்ட், ஜவகர் மெட்ரிக், செயின்ட் குளூனி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பங்கேற்றனர். அறிவியல் இயக்க நெய்வேலி கிளைச் செயலர் மோகன் தலைமையில், இயக்க தலைவர் பாலகுருநாதன், பொருளாளர் சிவக்குமார், பிரசன்ன குமார், கண்ணன், பேபி மாலா, எஸ்.கே.அன்பழகன், தாமரைச்செல்வி, ஆனந்த் பிரசாத், வெற்றிவேலன், பி.அருள், ராணி, கிருஷ்ணவேணி, ஆண்டனி ராயப்பன், செல்வின் ராஜ், பெஞ்சமின் ராஜ், கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் போட்டிகளை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


