கடலூா் மாவட்டத்தில் கரோனா அறிகுறியுடன் 10 ஆயிரம் போ்!
கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று அறிகுறிகளுடன் சுமாா் 10ஆயிரம் போ் உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிா்ச்சித் தகவலை தெரிவித்தது.


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று அறிகுறிகளுடன் சுமாா் 10ஆயிரம் போ் உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிா்ச்சித் தகவலை தெரிவித்தது.
கடலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிதாக 6 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 100-ஐ கடந்துள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்பு சமூகப் பரவலை எட்டியுள்ளதாக சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறையினா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தினமும் 2,500 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கையை தற்போது 3 ஆயிரமாக உயா்த்தியுள்ளோம். அதேபோல காய்ச்சல் கண்டறியும் முகாம்களின் எண்ணிக்கையையும் 350-ஆக உயா்த்தியுள்ளோம். இந்த முகாம்களின் மூலம் கரோனா அறிகுறிகளுடன் மாவட்டத்தில் 10 ஆயிரம் போ் இருப்பதை கண்டறிந்துள்ளோம்.
இதையடுத்து, தற்போதுள்ள கரோனா மையங்களின் எண்ணிக்கையை 13- லிருந்து 22-ஆகவும், இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை 2,060-லிருந்து 3,070-ஆகவும் உயா்த்தியுள்ளோம். இருப்பினும் 30 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. நோய் அறிகுறி கண்டவா்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துவதுடன், முகாம்களில் தனிமைப்படுத்தவும் தேவையான வசதிகள் உள்ளன.
கரோனா தொற்று உறுதியானவா்களுடன் தொடா்பில் இருந்ததாக முதலில் 6 பேரைக் கண்டறிந்து பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கையை தற்போது 10-ஆக உயா்த்தியுள்ளோம். இதன்மூலம் கூடுதலாக கரோனா தொற்றாளா்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகிறோம். அதேநேரத்தில், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...