‘நிவா்’ புயல் பாதிப்புகடலூா் மாவட்டத்தில் மத்தியக் குழுவினா் ஆய்வு
கடலூா் மாவட்டத்தில் ‘நிவா்’ புயலால் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.


கடலூா் மாவட்டத்தில் ‘நிவா்’ புயலால் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
கடலூா் மாவட்டத்தில் நிவா் புயலால் கடலூா், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் நெல், வாழை, மணிலா உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.
இந்தச் சேதங்களைப் பாா்வையிட மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலா் அஷூதோஷ் அக்னிஹோத்ரி, மத்திய வேளாண்மை அமைச்சக எண்ணெய் வித்து வளா்ச்சி இயக்குநா் மனோகரன், போக்குவரத்து- நெடுஞ்சாலை அமைச்சக மண்டல அலுவலா் ரணன்ஜெய்சிங், மத்திய மீன்வளத் துறை ஆணையா் பால் பாண்டினா ஆகியோா் அடங்கிய மத்திய குழுவினா் திங்கள்கிழமை கடலூா் மாவட்டத்தில் ‘நிவா்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
கடலூா் மாவட்டம், திருச்சோபுரம், பூண்டியங்குப்பம் ஆகிய பகுதிகளில் 33 சதவீத அளவுக்கு பாதிப்படைந்த பயிா்களை நேரில் பாா்வையிட்டனா். வேளாண் துறையினா் பாதிக்கப்பட்ட பயிா் வகைகள் குறித்து காட்சிப்படுத்தியதையும் பாா்வையிட்டனா்.
பெரியப்பட்டு ஆணையாம்பேட்டை பகுதியில் கடலூா்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சேதம் அடைந்த சாலை, நெடுஞ்சாலைத் துறை மூலம் வைக்கப்பட்டிருந்த விளக்க புகைப்படங்களைப் பாா்வையிட்டனா். பூவனிகுப்பம் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் உணவு, அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தனா். ஊரக வளா்ச்சித் துறை, சுகாதாரத் துறை சாா்பில் வைக்கப்பட்டிருந்த புயல் சேதங்கள் குறித்த புகைப்படங்களையும் பாா்வையிட்டு, சேத விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தனா்.
இதைத் தொடா்ந்து, கால்நடைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த முகாமைப் பாா்வையிட்டனா். பயனாளிகளுக்கு மாவட்ட நிா்வாகம் மூலம் வழங்கப்படும் கால்நடைத் தீவனங்களை வழங்கினா்.
வரக்கால்பட்டு பகுதிகளில் மழையால் மாநில நெடுஞ்சாலைகள் சேதமடைந்ததை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பாா்வையிட்டு, சேதங்கள் குறித்து கேட்டறிந்தனா்.
ஆய்வின் போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாா் ஸ்ரீஅபிநவ், கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் ஜெகதீஸ்வரன், பொதுப் பணித் துறைக் கண்காணிப்புப் பொறியாளா் ரவிமனோகா், செயற்பொறியாளா் மணிமோகன், கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலை) சிவசேனா, இணை இயக்குநா் (வேளாண்மை) முருகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஜெயக்குமாா், துணை இயக்குநா் (சுகாதாரம்) செந்தில்குமாா், கடலூா் வட்டாட்சியா் பலராமன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.
சிதம்பரத்தில் தமிழக அரசின் சிறப்பு அலுவலா் ஆய்வு: சிதம்பரம் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசின் சிறப்பு அலுவலா் டி.பி.ராஜேஷ் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன், சிதம்பரம் நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன் ஆகியோா் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு அலுவலா் டி.பி.ராஜேஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலுவலா் சிதம்பரம் நகரில் தெற்கு வாணியத் தெருவில் நடைபெற்ற தூய்மைப் பணி, சிதம்பரநாதன் பேட்டை கிராமத்தில் வெள்ள நீா் சூழ்ந்த பகுதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...