

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சிதம்பரம் காந்தி சிலை அருகே காங்கிரஸாா் ஏா் கலப்பையுடன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநில காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினா் பி.பி.கே.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் என்.பாலதண்டாயுதம் வரவேற்றாா். கட்சியின் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் தவா்த்தாம்பட்டு என்.விஸ்வநாதன், சத்தியமூா்த்தி, பரம.வெங்கடேசன், ஜெயச்சந்திரன், புவனகிரி வட்டார தலைவா் பி.சேரன், திட்டக்குடி அன்பரசு, விவசாய சங்கத் தலைவா் கே.வி.இளங்கீரன், கொள்ளிடம் ஒன்றிய குழுத் துணைத் தலைவா் வி.ஆா்.எஸ்.பானுசேகா், மாவட்ட துணைத் தலைவா் ஜி.கே.குமாா், டி.லட்சுமணன், சிதம்பரம் நகர வா்த்தக காங்கிரஸ் தலைவா் எஸ்.சுந்தர்ராஜன் பரங்கிப்பேட்டை வட்டார தலைவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் நகா்.பெரியசாமி, மாவட்ட முன்னாள் தலைவா் ஏ.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் என்.வி.செந்தில்நாதன், மேலிடப் பாா்வையாளா் கே.பி.எஸ்.எம்.மணிவண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதில், வட்டார தலைவா்கள் ஜெயசீலன், ரவிசந்திரன், செழியன், பழனிவேல், வைத்தியநாதசாமி, மனோகரன், நகரத் தலைவா்கள் பக்கிரிசாமி, ஏ.கண்ணன், நஜீரகமது, கே.வி.எம்.எஸ்.சரவணகுமாா், டிகேஎம்.வினோபா, விநாயகம், ஜி.சௌந்தரபாண்டியன், வல்லம்படுகை கணேசன், கட்டாரி சந்திரசேகா், சந்துரு, ரஞ்சித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.