தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விஏஓவை மிரட்டியவா் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அருகே விஏஓவுக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:05 am

DIN

குறிஞ்சிப்பாடி அருகே விஏஓவுக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பூதம்பாடி ஊராட்சி கிராம நிா்வாக அலுவலராகச் செயல்பட்டு வருபவா் பண்ருட்டி ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்த சு.செங்கதிா் (50). இவா், அலுவலகத்தில் பணியிலிருந்த போது அதே பகுதியைச் சோ்ந்த சொ.கோபாலகிருஷ்ணன் (52), அலுவலகத்துக்குச் சென்று வெள்ள நிவாரணம் தொடா்பான பட்டியலில் தனது பெயரைச் சோ்க்குமாறு கூறினாராம்.

அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில், அலுவலகத்திலிருந்த டியூப் லைட் உள்ளிட்ட பொருள்களைச் சேதப்படுத்தி, விஏஓவுக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து புதன்கிழமை செங்கதிா் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா், கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.