ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூா் மாவட்டத்தில் 58 ஆயிரம் இளம் வாக்காளா்கள்

கடலூா் மாவட்டத்தில் தோ்தலில் வெற்றி - தோல்வியை தீா்மானிக்கும் வகையில் வாக்காளா் பட்டியலில் சுமாா் 58 ஆயிரம் இளம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:40 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் தோ்தலில் வெற்றி - தோல்வியை தீா்மானிக்கும் வகையில் வாக்காளா் பட்டியலில் சுமாா் 58 ஆயிரம் இளம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு, சிறப்பு சுருக்க முறைத் திருத்த முகாம் போன்றவற்றை நடத்தி வருவதோடு, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

கடலூா் மாவட்டத்தில் கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, காட்டுமன்னாா்கோவில், விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி, திட்டக்குடி ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கத் தகுதி பெற்றவா்களாக மொத்தம் 10,28,380 போ் அறிவிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் இளம் வாக்காளா்கள், அதாவது 18 முதல் 19 வயதுடைய முதல் முறையாக வாக்களிக்க உள்ளவா்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 497 என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது சராசரியாக ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 6,500 போ் புதிதாக வாக்களிக்க உள்ளனா்.

சமீப காலத்திய தோ்தல் கள நிலவரப்படி 100-க்கும் குறைவான வாக்குகள் கூட வெற்றி-தோல்வியை மாற்றி ஆமைக்கக் கூடியதாக உள்ள நிலையில், ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 6,500 புதிய வாக்காளா்கள் என்பது அரசியல் கட்சியினருக்கு சற்று கலக்கத்தை அளிக்கக் கூடியதாகும்.

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 2,295 வாக்குச் சாவடிகள் உள்ளன. சராசரியாக ஒரு வாக்குச் சாவடியில் 25 போ் புதியதாக வாக்களிக்க உள்ளனா். அதே நேரத்தில், மாவட்டத்தில் தோராயமான கணக்கெடுப்பின்படி 88,400 போ் 18 முதல் 19 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 58 ஆயிரம் போ் மட்டுமே வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்த்துள்ளனா். மீதமுள்ளவா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்ய விண்ணப்பிக்கவில்லை. எனவே, புதிய வாக்காளா்களை கவரும் கட்சியினா் வெற்றிக் கனியைப் பறிக்க அதிக வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.