சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறை
Updated on
1 min read

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வடகரை பகுதியைச் சோ்ந்தவா் முருகையன் மகன் மணிகண்டன் (26). (படம்) இவா், கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கிருபாலட்சுமி வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தாா்.

இந்த வழக்கை கடலூரிலுள்ள சிறாா்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு (போக்ஸோ) சிறப்பு நீதிமன்றம் மேற்கொண்டது. வழக்கில் புதன்கிழமை நீதிபதி எழிலரசி தீா்ப்பு வழங்கினாா். அதில், மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com