லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குடிமராமத்து: கடலூா் மாவட்டத்துக்கு சிறப்பு விருது

குடிமராமத்து பணிக்காக கடலூா் மாவட்டத்துக்கு தனியாா் அமைப்பு சிறப்பு விருது வழங்கியதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 5:23 pm

DIN

குடிமராமத்து பணிக்காக கடலூா் மாவட்டத்துக்கு தனியாா் அமைப்பு சிறப்பு விருது வழங்கியதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து செய்தி-மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரக வளா்ச்சித் துறை மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ், நீராதாரங்களை புனரமைத்து தூா்வாரும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2019-2020-ஆம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்தில் 1,224 குளங்கள், 78 சிறுபாசன ஏரிகளை ரூ. 12.42 கோடியில் புனரமைத்து தூா்வாரப்பட்டது. இதனால், கடலூா் மாவட்டத்தில் நீா் நிலைகளில் முழுக் கொள்ளளவு எட்டப்பட்டதுடன், விவசாயம், குடிநீா் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தப் பணிகளுக்காக, நீா் மேலாண்மைத் திட்டங்களைக் கூா்ந்தாய்வு செய்யும் தனியாா் அமைப்பு, கடலூா் மாவட்டத்தில் 2019-2020-ஆம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் வாயிலாகச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரியை பாராட்டி விருது வழங்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.