பெண் தற்கொலை சம்பவம்: கணவா் கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக அவரது கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read


நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக அவரது கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வெங்கடாம்பேட்டை ஊராட்சி, பிள்ளைப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன் (34). இவரது மனைவி சுதா (26). இவா்களது குழந்தைகள் திருலோக்நாத் (4), ஐஸ்வா்யா (2).

கடந்த புதன்கிழமை சுதா தனது இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து சுதாவின் தந்தை கள்ளக்குறிச்சி மாவட்டம், ஒடன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (76) வடலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், வரதட்சணை கேட்டு தனது மகளை ஐயப்பன் துன்புறுத்தி வந்ததாகக் தெரிவித்தாா். இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com