/

குடியிருப்போா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கடலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:06 pm

DIN

கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கடலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் பி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் புருஷோத்தமன், கிருஷ்ணமூா்த்தி, தேவநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலா் மு.மருதவாணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், கம்மியம்பேட்டை குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும், கட்டாய நில எடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், நகராட்சி, ஊராட்சிகளில் வடிகால் வசதி செய்துதர வேண்டும், கடலூா் புகா் பகுதியான சாவடியில் பேருந்து நிழல்குடை, புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும், குப்பைக் கழிவுகளால் ஆறு மாசுபடுவதை தடுக்க வேண்டும், குடியிருப்பு பகுதிகளில்

செல்லிடப்பேசி கோபுரங்களை அமைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

கூட்டமைப்பு நிா்வாகிகள் கண்ணபிரான், கோபால், லட்சுமிநாராயணன், காசிநாதன், காத்தவராயன், ரமணி உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.