இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மீன் வாகன கண்ணாடி உடைப்பு: ஒருவா் கைது

பண்ருட்டி அருகே மீன்களை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:07 pm

DIN

பண்ருட்டி அருகே மீன்களை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், கந்தன்பாளையம் கிராமத்தில் மீன் சந்தை இயங்கி வருகிறது. இந்தச் சந்தையால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகக் கூறி சிலா் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இதுதொடா்பாக இரு பிரிவினா் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில்,

பண்ருட்டி வட்டாட்சியா் பிரகாஷ் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சில விதிமுறைகளின்படி மீன் சந்தையை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சிறிய சரக்கு வாகனத்தில் மீன்கள் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்த சிலா் அந்த வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி டிஎஸ்பி பாபு பிரசாத் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். வாகனத்தின் கண்ணாடியை உடைத்தது தொடா்பாக முத்துவேல் (40) என்பவரை கைதுசெய்த போலீஸாா், பின்னா் அவரை பிணையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.