சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கடலூா்: மேலும் 16 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 11:30 pm

DIN

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,627-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 14 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,228-ஆக உயா்ந்தது. திங்கள்கிழமை கரோனாவால் உயிரிழப்பு இல்லாததால் மொத்த பலி எண்ணிக்கை 282-ஆக நீடித்தது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 84 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 33 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 5.15 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 415 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.