கொளஞ்சியப்பர் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) வழிபட்டார்.


விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) வழிபட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திருகொளஞ்சியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்து சாமி தரிசனம் செய்து துண்டு சீட்டில் எழுதி அங்குள்ள மரத்தில் கட்டினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது இந்துக்களின் ஐதீகம்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இக்கோயிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தார். அப்போது தனது குடும்ப உறுப்பினர்கள் பெயர்களுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். தொடர்ந்து தனது கோரிக்கையை எழுதி அங்குள்ள மரத்தில் கட்டினார். அதற்காக ஒரு தொகையை அவர் கட்டணமாகவும் செலுத்தினார்.
அப்போது திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வெ. கணேசன் உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...