உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பெண்கள் 300 பேருக்கு நிவாரண உதவி

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில்  சிதம்பரம் மந்தக்கரை செல்லியம்மன் கோயில் அருகே கவரிங் கடைகளில் வேலை செய்யும் கணவரை இழந்த ஏழை எளிய பெண்களுக்கு

News image
Updated On :1 ஜூன் 2020, 6:16 am

DIN

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில்  சிதம்பரம் மந்தக்கரை செல்லியம்மன் கோயில் அருகே கவரிங் கடைகளில் வேலை செய்யும் கணவரை இழந்த ஏழை எளிய பெண்களுக்கு 300 பேருக்கு அரிசி மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  நகர தலைவர் தில்லை. ஆர். மக்கின் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ஏ. நெடுஞ்செழியன், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், நகர இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு கவரிங் கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தில்லை. சீனு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி தலைவி ராஜலட்சுமி, மாவட்ட தொண்டர் அணி தலைவர் தில்லை. கோ. குமார், நகர நிர்வாகிகள் இளங்கோவன், சின்ராஜ், பாலகுரு, ஒன்றிய கவுன்சிலர் எம்.கே.பாலா, வட்டாரத் தலைவர் பகவத்சிங், மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் தில்லை .செல்வி, சுப்புலட்சுமி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கோ. ஜனகம், மீனா செல்வம், நிர்வாகிகள் அழகர் மாலா, ராதா, ருக்மணி, மாலா, பா.ம.க நகர தலைவர் ஞானகுரு, நிர்வாகிகள் கீரை. முருகன், பூராசாமி, மருத்துவ அணி தலைவர் டாக்டர். பாரிநெடுஞ்செழியன், டாக்டர்.முபாரக் அலி, நகர இளைஞரணி தலைவர் துரை. சிங்காரவேலு, உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்குகின்றனர். முடிவில் நகர பொருளாளர் எஸ். எஸ் நடராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.