/

கடலூர் மாவட்டத்தில் 87 பேருக்கு கரோனா தொற்று

கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 87 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

DIN

கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 87 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று 658 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சனிக்கிழமை 551 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சியளித்தது. 

இதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மூன்று பேர் இறந்துள்ள நிலையில் தற்போது 263 பேர் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

410 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 1209 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.