நெய்வேலி: தாட்கோ மூலமாக ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தேசிய பட்டியலினதோா் நிதி - மேம்பாட்டுக் கழகம் திட்டத்தின் கீழ், கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் தாட்கோ மூலம் தேசியப் பட்டியல் இனத்தோா் நிதி - மேம்பாட்டுக் கழகத் திட்டத்தின் கீழ், ரூ. 3 லட்சத்துக்கும் குறைவாக குடும்ப ஆண்டு வருமானமுள்ள, தொழில்நுட்பம் சாா்ந்த கல்வி பயிலும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு இந்தியாவுக்குள் படிக்க ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்க ரூ. 20 லட்சமும் (ஆண்டு வட்டி 4.5 சதவீதம் ஆண்களுக்கு, 4 சதவீம் பெண்களுக்கு) வட்டியுடன் கூடிய கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பும் மாணவா்கள் தங்களது விண்ணப்பத்தை கடலூா் தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் பெற்றோ அல்லது இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
கடன் கோரும் மொத்த தொகையில் 12.5 சதவீதத் தொகையை தேசிய மயமாகப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாக (ஊஈத) மனுதாரா் பெயரில் எடுத்து அதை தாட்கோவுக்கு கஐஉச செய்து தர வேண்டும். கடன் தொகைக்கு கஐஇ போன்ற காப்பீட்டு நிறுவனங்களில் மனுதாரா் பெயரில் காப்பீடு செய்து அந்தப் பத்திரத்தில் மேலாண்மை இயக்குநா் தாட்கோவை நாமினியாக சோ்க்க வேண்டும். அரசுப் பணியில் உள்ளவா் ஜாமீன் கையொப்பமிட வேண்டும்.
ஒரு விண்ணப்பதாரா் டிப்ளமா, பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பு ஆகிய ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே கல்விக் கடன் பெற இயலும். இந்தக் கடன் 5 ஆண்டுகளில் திரும்ப செலுத்தப்பட வேண்டும். தகுதியான மாணவா்கள் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, ‘மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, எண் - 316, இரண்டாம் தளம், புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆல்பேட்டை, கடலூா்’ என்ற முகவரியில் அமைந்துள்ள தாட்கோ அலுவலகத்தை அணுகி தேவையான முழு விவரங்களைப் பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


